Monday, January 24, 2011

எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

  
A  beautiful melody from the film Bhaktha Meera. Gem of a song !!

 எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

யது வீரனை நந்த குமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !


மலரே இருவிழி  பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம்  நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

அன்னை தந்தை பதியும் அவன் !
அருந்துணை நவநிதியும் அவன் !

இன்பமும் அழகும் அவனே - என்
இன்பமும் அழகும் அவனே !
எழில் தரும் அணி பணிபவனே !

மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !